பரவும் புதிய வகை கொரோனா
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. முந்தைய கோவிட் மாறுபாடுகளைவிட எரிஸ் மிகவும் ஆபத்தானது அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவது இந்நோய் வேகமாக பரவுவதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags :