by Staff /
13-07-2023
03:47:32pm
திருச்சியில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ ஆலோசனை முகாமை கமிஷனர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ ஆலோசனை முகாமில் பேசிய அவர், “காவலர்கள் மன உளைச்சலை போக்க யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இனி காவலர்கள் விருப்பம் போல் விடுமுறை எடுக்க சுதந்திரம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via