அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

by Admin / 28-02-2026 06:45:41pm
அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் ஈரானின் முக்கிய ராணுவத்தலங்கள் மற்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லாஅலி க மேனி இல்லம் மற்றும் அலுவலக பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டன .டெக்ரான் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களின் மீதும் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன இதனால் ஈரான் முழுவதும் பதற்றம் சூழ்ந்துள்ளது. ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இல்லம் அலுவலகப் பகுதி மற்றும் ஜனாதிபதி மசூத் பே செ கியன் ஆகியோரை இலக்காக வைத்து இந்த தீவிர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிகிறது.. கெர்மன் சா இஸ் பகான், தப் ரிஸ், கராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவத்தலங்கள் மற்றும் கடற்படைகள் முகாம்கள் தாக்கப்பட்டன. தாக்குதலின் பொழுது டெக்ரானில் இல்லை என்றும் அவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.. இந்த தாக்குதலுக்கு காரணம் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தவும் ஈரான் ஆதரவு படைகளை அச்சுறுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் யுற்றம் ஈரான் மீதான பெறும் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளார் .இது ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகும். இதனால் இஸ்ரேல்-ஈரான் இடையிலான வான் வலியை இரு நாடுகளும் மூடியுள்ளன. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நாடுகளுக்கு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..

அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
 

Tags :

Share via