மாஞ்சோலையை தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் கண்ணீருடன் விடை பெற்றமக்கள்.

நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ளது.மாஞ்சோலை தேயிலை தோட்டம் இங்கு ள்ள நிறுவனம் தனது குத்தகைக்காலம் முடிவதற்கு முன்னதாகவே அரசிடம் ஒப்படைப்பு செய்ய உள்ளது.இதனைத்தொடர்ந்து இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பணிக்கணக்கை நிறைவுசெய்து அவர்களை வெளியேற்றும் பணியை கடந்த சிலைமாதங்களாக செய்த்தவந்தநிலையில் நேற்றுடன் அவர்களது பனிக்காலம் நிறைவாடைந்ததைத்தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் சுமார் 3 தலைமுறையாக வசித்து வரும் தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது. நேற்றுடன் அவர்களுக்கு வேலை வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் தொழிலாளர்கள் ஒன்று கூடி கண்ணீர் விட்டு கதறி அழுது தோட்டத்தைவிட்டு வெளியேறப்போகும் வலியையும்,பிரிவை வெளிப்படுத்தும் வலியையும் கலந்து கண்ணீர்மல்க பாடல்பாடிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் அங்கு கிடைக்கும் பாசம் வேறு எங்கும் கிடைக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags : மாஞ்சோலையை தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் கண்ணீருடன் விடை பெற்றமக்கள்.