மோடிக்கு தங்க சிலை

by Staff / 21-01-2023 05:20:38pm
மோடிக்கு தங்க சிலை

சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் நகை தயாரிப்பு நிறுவனம் ஒன்று 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் சிலையை உருவாக்கியுள்ளது. இந்த சிலை 20 பொற்கொல்லர்கள் மூலம் 3 மாதங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.11 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வாங்க பலர் ஆர்வமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories