பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போதகர் சிறையில் அடைப்பு சென்னை, ஏப்.20 சென்னை அருகே ஆவடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போதகரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆவடி அருக

.
சென்னை ஆவடி அருகே மோரை, நியூ காலனியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட். இவர் அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். திருமலை நகரில் ஆலயம் ஒன்றையம் நடத்தி வருகிறார் . கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவருடன் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறி வேதனை அடைந்துள்ளார். இதனையறிந்த போதகர் டேவிட் குடும்ப கஷ்டம் தீர பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் தனது ஆலயத்திற்கு வந்து ஜெபம் செய்தால் கஷ்டம் தீரும் என்றும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 17 - ந்தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள ஆலயத்திற்கு தனியாக சென்று உள்ளார். அங்கு முழங்கால் படியிட்டு அந்த பெண் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஸ்காட் டேவிட் அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் ஸ்காட் டேவிட்டை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . நீதிபதியின் உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட் திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags :