அரசை அவதூறாக பேசிய இந்து முன்னணி பிரமுகர் கைது

நெல்லை மாவட்டம் விகேபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர் கடந்த 17ம் தேதி விக்கிரமசிங்கபுரத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பால்ராஜ் திமுக எம்பி ராசாவையும், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும்,மற்றும் தமிழக அரசையும் விமர்சித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து வி.கே.புரம் காவல்துறை ஆய்வாளர் பெருமாள் வழக்கு பதிவு செய்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜை கைது செய்ததார்.இந்த சம்பவம் அந்தப்பாகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :