இயந்திர கோளாறு:3 நாட்களுக்கு  ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவிப்பு 

by Editor / 14-05-2021 04:10:07pm
 இயந்திர கோளாறு:3 நாட்களுக்கு  ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவிப்பு 



இயந்திர கோளாறு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்றமும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை கண்காணிக்க, இதற்கென்று தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை, நேற்றுமுன்  காலை 7 மணி அளவில் அதனை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.
இதனை ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டு சென்றது. ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.இந்நிலையில் திடீரென்று ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுது நீக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via