காலம் பேசாது காத்திருந்து, பதில் சொல்லும். -ரஜினிகாந்த்

by Admin / 17-03-2026 11:46:21pm
காலம் பேசாது காத்திருந்து, பதில் சொல்லும். -ரஜினிகாந்த்

தமிழக வெற்றிக்கழக தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜுன் திமுகவில் தலையிட்டால்தான் ரஜினி அரசியலை விட்டு ஒதுங்கினார் என்கிற சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் எந்த நெருக்குதலுக்கும் ரஜினி கட்டுப்பட்டவர் அல்லர் என்கிற கருத்தை வெளியிட்டு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் ரஜினியிடம் இருந்து எந்த விதமான பதிலும் வராத நிலையில் ,இன்று அவரிடம் இருந்து  காலம் பேசாது காத்திருந்து, பதில் சொல்லும். என்கிற கருத்தை முன்வைத்து தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா ரஜினியை வைத்து அரசியல் செய்ய முயல்கிறார் என்பதினால் பலர் இந்த கருத்திற்கு எதிர்வினை ஆற்றவில்லை. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்து ரஜினியின் புகழை கெடுக்கிற விதமாக இருந்ததின் காரணமாக அவர்தம் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

காலம் பேசாது காத்திருந்து, பதில் சொல்லும். -ரஜினிகாந்த்
 

Tags :

Share via
Logo