தமிழகத்தில் பொதுமுடக்கமா ? ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா தொற்று இருபதாயிரத்தைத் தொட்டுவிட்டதை அடுத்து ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி பொறுப்பேற்க உள்ள முதல்வர் ஸ்டாலினுடன் அதிகாரிகள் விவாதித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஊரடங்கே இப்போதைக்கு உடனடி வழி என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
ஆனால் தமிழகத்தின் நிதி நிலைமை, ஊரடங்கு விதித்தால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்டுவதற்கான நடவடிக்கை குறித்து ஸ்டாலின் யோசிக்கிறார்.
இதற்கிடையில் சென்னையில் கொரோனா பரவல் பற்றி விவாதித்து தனக்கு ஒரு அறிக்கை தருமாறும் தமிழகம் முழுதும் தனது கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில் ஊரடங்கு பற்றி ஸ்டாலின் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags :