குறுக்கே வந்த தெருநாய்.. பைக் விபத்தில் சிறுவன் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலையின் நடுவே தெருநாய் குறுக்கே வந்ததால், ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற சிறுவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். பிலாய் பகுதியில் இரவு 10 மணியளவில், ரௌனக் (16) என்ற சிறுவன் அதிவேகமாக ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது தெரு நாய் ஒன்று அவரை கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய சிறுவன் ஸ்கூட்டியோடு அருகிலிருந்த வடிகாலில் விழுந்தார். இந்த கோர விபத்தில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :


















