இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது

by Editor / 09-07-2025 02:25:12pm
இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது

ராஜஸ்தான்: சுரு மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. பானுடா கிராமத்தில் ஜாகுவார் ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo