யார் வேணா கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால்.. ஜெயக்குமார்
![யார் வேணா கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால்.. ஜெயக்குமார்](Admin_Panel/postimg/26jakumar.jpg)
இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அரசியல் என்பது பெரிய கடல் போன்றது, அதை நீந்தி கடந்தவர்களும் உண்டு மூழ்கிப்போனவர்களும் உண்டு. விஜய் நீந்தி கடக்கிறாரா இல்லை மூழ்கிப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் என விஜய் குறிப்பிட்டுள்ளார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் கூறியதற்கு பொருத்தமான காட்சிகள் பாஜக, திமுக ஆகிய இரண்டு காட்சிகள்தான் என கூறியுள்ளார்.
Tags :