3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

by Staff / 13-04-2024 03:42:34pm
3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள வளவனேரி கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி பானுமதி, ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி பானுமதி மற்றும் 7ஆம் வகுப்பு  படிக்கும் மகன் பிரசாத் மேலும் 2 வயது இரட்டை குழந்தைகளான சாத்விக், சாத்விகா, ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்து இரண்டு நாட்களாக வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌.கதவை உடைத்து பார்த்த போது மூன்று குழந்தைகள் தரையிலும், தாய் பானுமதி தூக்கிலும் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்கொலையா? கொலையா? என இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories