17 ஆயிரம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் முடக்கம்

by Staff / 26-04-2024 12:33:54pm
17 ஆயிரம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் முடக்கம்

தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 17,000 கிரெடிட் கார்டுகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வங்கியின் டிஜிட்டல் மீடியாவில் மற்றவர்களின் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், உடனடியாக குறைபாடு சரி செய்யப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது. தரவுகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. யாருக்கேனும் நிதி இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் அனைத்து கார்டுகளும் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via