170 ஆண்டில் ராய்ட்டர்ஸ் நியமித்த முதல் பெண் தலைமை ஆசிரியர்!

by Editor / 15-04-2021 02:46:57pm
170 ஆண்டில் ராய்ட்டர்ஸ் நியமித்த முதல் பெண் தலைமை ஆசிரியர்!

உலக நாடுகளில் 2,450 செய்தியாளர்களுடன் பணியாற்றிவரும் ராய்ட்டர் நிறுவனம் பல இடங்களில் தன்னுடைய கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது.

உலக நாடுகளில் 2,450 செய்தியாளர்களுடன் பணியாற்றிவரும் ராய்ட்டர் நிறுவனம் பல இடங்களில் தன்னுடைய கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தற்போதைய ஆசிரியராக உள்ள ஜே. அட்லர் இந்த மாதத்துடன் முதன்மை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். இவருடைய காலகட்டத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஏராளமான இதழியல் விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஏழு புலிட்சர் விருதுகளை ஜே. அட்லர் ஆசிரியராக இருந்தபோது ராய்ட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரோம் நாட்டில் பிறந்தவரான 47 வயதான அலெஸாண்ட்ரா கல்லோனியை ராய்ட்டர்ஸ் நிறுவனம் முதன்மை ஆசிரியராக நியமித்துள்ளது. அலெஸாண்ட்ரா வரும் 19-ம் தேதி முதல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராக தன்னுடைய பணிகளை அதிகாரபூர்மாக தொடங்கவுள்ளார்.

 

Tags :

Share via