கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றை 3 நிமிடங்களில் கண்டறியலாம்:

by Editor / 15-04-2021 02:41:36pm
கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றை 3 நிமிடங்களில் கண்டறியலாம்:

கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியும் புதிய முறை

கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியும் புதிய முறையை ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் செயல்படும் நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. தாங்கள் கண்டறிதுள்ள செயலிக்கு Semic EyeScan என்று பெயரிட்டுள்ளனர்.
ஸ்மார்ட் போன் மூலம் கண்களைப் படம் எடுத்து இந்த செயலிக்கு அனுப்பினால் கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அழற்சி அறிகுறி - மூலம் கரோனா தொற்றை உறுதி செய்து அது கூறுகிறது .
கண்களின் விழிப்படலத்தில் ஏற்படும் லட்சக்கணக்கான இளஞ்சிவப்புகளில் கரோனாவினால் ஏற்படும் இளஞ்சிவப்பை தனிமைப்படுத்திக் கண்டறிந்து தொற்றை உறுதி செய்ய தங்களால் முடிந்ததாக நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த செயலியின் முடிவுகள், 95% சரியாக உள்ளதாகவும், 3 நிமிடத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via