.உடல் தேடல்களை பயங்கரப்போராக நாம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது.....
பெண் குழந்தைகள் -சிறுமிகள் -மகளிர் என, நம் சமூகத்தில் பெண் இனத்தை போற்ற வேண்டியது ,நம் கடமை. ஆனால், பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்ந்து வரும் பாலியல் வன்முறை தாக்குதல்களை, சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. இவற்றை களைவதற்கான முயற்சிகளை.... யார் ?.. கையில் எடுப்பார்கள் என்று பூனைக்கு மணிகட்டும் கதையாக ,ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு ,சாதாரணமாக ,நாம் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம்
. பெண்ணை தாயாக- தோழியாக -சகோதரியாக ஏன் ? சகலமாக பார்த்த சமூகத்தில், பாலியல் ரீதியான தாக்குதல் தொடர்ந்து நிகழ்த்தப்படுவது, சமூகத்தின் இதயத்தை சம்பட்டிகளால் அடித்து நொறுக்குவது போன்ற சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெறுவதைப் பார்க்கையில் வேதனை அதிகரிக்கின்றது .
வெறும் புலன் சார்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு களமா?... பெண் இல்லை. .இது போன்ற சிந்தனைகளை நாம் வளர்த்துக் கொண்டால், நம் சமூகத்தில் பெண் இனம் மட்டுமல்ல .ஆணினமும் அழிந்து போய் மனித இனமே வேரற்றுப் போகக்கூடிய நிலை உருவாகும்.
இந்தப் பிரச்சனையை யார் தீர்க்க வேண்டும். அரசாங்கமா ? குடும்பமா ?இல்லையே ...சமூக அக்கறை உள்ள நிறுவனங்களா? பெண்ணின் விடுதலைக்கும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்களா?... இல்லை ., ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்களா?. யாரு... மேலேயும் குற்றத்தை சொல்லி ,ஒவ்வொரு மனிதர்களும் ஏன்? ஒவ்வொரு ஆண்களும் மிகச் சாதாரணமாக நாம் கடந்து போய்விட முடியாது:. கடந்து போகவும் கூடாது. அது நம் மனித இனத்திற்கு, அதுவும் குறிப்பாக, பெண் இனத்திற்கு செய்யும் ஒரு பெரும் குற்றமாகும்..
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மனித ஜென்மம் .ஏன்? மனுசி என்று கூட நாம் சொல்லலாம் .அவர்களை நாம் பாதுகாக்க வேண்டிய கடமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறோம்.. நம்மோடு ,நம் வாழ்வியலோடு இரண்டற கலந்து இருக்கின்ற பெண் இனத்தை வேர் அறுப்பதற்கான முயற்சியில் நாம் செயல்படுவது அதுவும் நம்மை அறியாமலே......அறிந்து செய்வது?..
சமூகத்திற்கு இழைக்கும் தீமைகளில் முக்கிய பங்காற்றுகிறோம்.. மனிதர்கள் மட்டுமன்றி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பாலியல் தேடல் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது .எப்பொழுதும், அது இருக்கும் .அப்பொழுது தான் அது தன் இனத்தை விருத்தி செய்து கொள்ள முடியும். ஆனால், எந்த ஒர் இனமும்- தம் இணையான ஒர் உயிரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறதா? என்று, நாம் ஆய்வை நிகழ்த்தி பார்த்தோம் என்றால்,... மனித இனத்தை- அதன் செயலையை நினைத்து நாம் வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.. மனித இனத்தில் மட்டும் தானே ...இந்த பாலியல் வன்கொடுமைகள்- வன்கொடுமை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நிகழ்த்தப்படுகின்ற கொடூரங்களை செய்பவர்கள், ஒரு சிலராக இருந்தாலும்.. ஆனால், நூற்றுக்கணக்கான- லட்சக்கணக்கான- கோடிக்கணக்கானவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதை ......,எப்படி தீர்க்க வேண்டும் என்கிற கருத்தை அரசாங்கமோ ? நிறுவனங்களோ? எடுத்து விட முடியாது. ஒவ்வொரு தனி மனிதர்களும் இதற்கான- பெண் இனத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் .அது மனதளவில் நிகழ்த்தப் பெற வேண்டும் .அப்பொழுதுதான், பெண்களுக்கு எதிராக- குழந்தைகளுக்கு எதிராக- சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
பாலியல் ரீதியான விஷயங்களில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம் என்று தான் தோன்றுகிறது. தெரிந்தோ -தெரியாமலோ அது மீது ஒரு ஆர்வமும் ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகின்றது. இது ஜீவராசிகளுக்கு உண்டான ஒரு பிறப்பின் தேடுதல் என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் ,ஒரு வன்முறையை நிகழ்த்தி தான், ஒரு உடல் வேட்கையை -சிறிது நேர சந்தோஷங்களை பெற வேண்டும் என்பது... எந்த விதத்தில் நியதி. அதுவும் தாக்குதலுக்கு உள்ளாக கூடியவர்களின் அனுமதி இன்றி... அவர்களுக்கு, இது பற்றிய எந்தவிதமான புரிதல்கள் இன்றி இருக்கையில், ...எப்படி...? அது பற்றி தெரிந்தவர்கள், இந்த அபாயகரமான யுத்தத்தை- உணர்ச்சி யுத்தத்தை செய்கிறார்கள் என்று நினைக்கையில் வேதனை தொடர்கிறது.
சமூகத்தில், ஒவ்வொருவரும் தன்னோடு இருக்கிறவர்களுடைய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க வேண்டியது கடமை
.உடல் தேடல்களை பயங்கரப் போராக நாம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது..
.தெரிந்து செய்யப்படுகிற அல்லது தெரியாமல் செய்யப்படுகின்ற பாலியல் சார்ந்த குற்றங்களை ஒரு கட்டுக்குள் வைத்தாக வேண்டும். யாருக்கு இந்த தேவைகள் இருக்கிறதோ/ அதற்கான வழிமுறைகளை பொது நிலையில், அரசோ ...சமூகமோ உருவாக்கி விட்டதென்றால் ,இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் நிகழாது.
Tags :