தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

by Editor / 28-12-2023 09:42:52am
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை காலமானார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் சிந்தி கதறி அழுகின்றனர். அவரது மறைவையொட்டி கட்சி தலைமையகத்தில் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாலிகிராமத்தைநோக்கி படையடுத்து சென்றவண்ணம் உள்ளனர்.

 

Tags : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Share via