கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் பதிவு

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் (84) வயது மூப்பு காரணமாக இன்று (ஏப்.25) காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :