இந்தியா குறித்து முக்கிய தகவலை தெரிவித்த தலிபான்கள்...
இந்தியாவுடனான வர்த்தகத்தை தொடர விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை நட்பு நாடாக கருதி வரும் இந்தியா, அந்நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் முக்கிய பங்காற்றியுள்ளது. அந்தவகையில் அந்நாட்டின் முக்கிய பங்குதாரராக, இந்தியா சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடு செய்து கிட்டதட்ட 500 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது அந்நாட்டின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், வர்த்தக ரீதியிலான தொடர்பில் இந்தியா நீடிக்குமா என சந்தேகிக்கப்படுகிறது.
அண்மையில் அதுகுறித்து பேசிய தலிபான்களின் மூத்த தலைவர் முகமது அப்பான் ஸ்டேன்க்சாய், இந்தியாவுடன் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான உறவை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :