பாஜக ஆட்சி தொடர்ந்தால் இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது” அகிலேஷ் யாதவ், “

by Staff / 26-03-2024 03:34:04pm
பாஜக ஆட்சி தொடர்ந்தால் இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது” அகிலேஷ் யாதவ், “

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகளில் இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் அதிபர் ஆட்சி முறை ஏற்பட்டுவிடும். சர்வாதிகாரம் தலைதூக்கி விடும். ஒரே கட்சி ஒரே நாடு என்ற முறை அமல்படுத்தப்படும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், “பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியைத் தொடர்ந்தால் இளைஞர்களுக்கு திருமணம்கூட நடக்காது” என்று எச்சரித்துள்ளார். காரணம் பாஜக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. வேலைவாய்பிற்க்காக காத்திருந்த இளைஞர்களுக்கு வயது ஆகிவிட்டது. இனி அவர்களுக்கு எப்படி திருமணம் நடக்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories