பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனம்

கோயம்புத்தூரில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை சூலூர் அடுத்த நீலாம்பூரில் சைதன்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வாகனம் இன்று காலை வழக்கம்போல பட்டணம் பகுதியில் இருந்து 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஜே.ஜே நகரில் மாணவ மாணவிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது ஜேஜே நகர் 30 அடி அகல மண் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த பைக்கிற்கு வழிவிட முயற்சித்ததில் வேன் கவிழ்ந்து 7 அடி பள்ளத்தி விழுந்தது. அக்கம்பக்கத்தினர் வந்து மாணவர்களை மீட்டனர். இதில் இரண்டு மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :