அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

by Editor / 07-11-2023 08:59:51am
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் தொடர்ந்து இன்று 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி மற்றும் அவரது மகன் கம்பனுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 க்கும் மேற்ப்பட்ட இடங்களில்

Share via

More stories