ஈரோடு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

by Staff / 02-03-2023 12:19:26pm
ஈரோடு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.வாக்கு எண்ணிக்கையில் 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் 24,938 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,428 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், 4-வது இடத்தில் தேமுதிக வேட்பாளர்களும் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo