ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்குதொகுப்பூதியம் உயர்வு:

by Editor / 13-06-2024 10:40:10pm
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்குதொகுப்பூதியம் உயர்வு:

தமிழ்நாட்டில் 44 பின் தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சுமார் 10 ஆண்டிற்கு பின்னர் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் போன்றவர்கள் அடக்கம்.

 

Tags :

Share via