தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட்டார்.

by Admin / 15-03-2026 01:48:42am
தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட்டார்.

சனிக்கிழமை அன்று  சோனம் வாங்க சுக் விடுதலை செய்யப்பட்டார். லடாக் காலநிலை ஆர்வலர் சோனம் வாங் சுக் தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் ஜோத்பூர் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். லடாக்கின் அமைதி நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கான தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்தது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாப்புக் கூறி செப்டம்பர் 2025 இல் நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறையை தூண்டியதாக கூறி செப்டம்பர் 26 2025 அன்று அவர் கைது செய்யப்பட்டார் .அவரது தடுப்பு காவலை எதிர்த்து அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த  ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் ,மத்தியஅரசு அவரை விடுவித்துள்ளது. சோனம் ஏற்கனவே சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காவலில் பாதி காலத்தை அனுபவித்து விட்டதாக குறிப்பிட்ட மத்திய அரசு லடாக் விவகாரங்களை உயர் அதிகார குழு மூலம் தீர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதன் பொருட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo