பாஜகவின் கொள்கை சனாதனம்- பாரதிய ஜனதாவின்  மாநில தலைவர்  அண்ணாமலை

by Admin / 15-09-2023 06:06:43pm
பாஜகவின் கொள்கை சனாதனம்- பாரதிய ஜனதாவின்  மாநில தலைவர்  அண்ணாமலை

என் மண்..என் *மக்கள் ...

நிகழ்ச்சியில் நடைபெறுமாக வரும் பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்ட பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :

 *சனாதனத்தை  ஒழிக்கப் போவதாக கூறும் திமுக* அரசு  சாராயக் கடையை முதலில் ஒழிக்கட்டும் ஊழலை ஒழிக்கட்டும் என என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதாவின்  மாநில தலைவர்  அண்ணாமலை காட்டமான பேச்சு 

பாஜகவின் கொள்கை சனாதனம் திமுகவின் கொள்கை களவாணித்தனம் இரண்டு ஆண்டுகளில் திமுகவின் ஊழல் பட்டியல் மிகப்பெரியது ஒரே ஆண்டில் மகனும் மருமகனும் திருடிய முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை மிகப்பெரிய கொள்ளை திமுக என்பது குறுநில மன்னர்களுககான குடும்ப ஆட்சி ஊருக்கு ஒருவர் பினாமி அவர் மட்டும் அவர் குடும்பம் சார்ந்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் மற்றவர்கள் எல்லாம் கொடி பிடிக்கவும் போஸ்டர் ஒட்டவும் மட்டுமே என்பது திமுகவின் கொள்கை என்றும் 

திண்டுக்கல் என்பது பூட்டுக்கு மிகவும் புகழ்பெற்றது அதனால் என்னிடம் இரண்டு பூட்டுக்கள் கொடுத்துள்ளார்கள் அதில் ஒரு பூட்டு திமுகவுக்கும் மற்றொரு பூட்டு காங்கிரஸ்க்கும் என்றார்

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி தான் என்றும் சந்திராயன் மூன்று டெலிகாம் சாப்ட்வேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞான கௌரி மணி  ராமராஜ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திண்டுக்கல் விருப்பாச்சி பாளையத்தை ஆண்ட கோபால் நாயக்கரின் நினைவாக திண்டுக்கல்  கோபாலசமுத்திரக்கரையில் முழு உருவச் சிலை நமது ஆட்சியில் நிறைவேற்றப்படும் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் 242 கோடி செலவில் பழனி பாலக்காடு இடையே  மின்சாரமயமாக்கப்பட்டது. என்று கூறினார்

வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை விரட்டியடித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர பாரதிய ஜனதாவிற்கு வாக்களிக்கும்படி   கேட்டுக்கொண்டார்

பாஜகவின் கொள்கை சனாதனம்- பாரதிய ஜனதாவின்  மாநில தலைவர்  அண்ணாமலை
 

Tags :

Share via

More stories