கமல் பேச்சுக்கு கர்நாடகா பாஜக மாநிலத் தலைவர் எதிர்ப்பு

கன்னடம் குறித்து பேசியதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, "ஒவ்வொருவரும் அவர்களின் தாய் மொழியை நேசிக்க வேண்டும். ஆனால், அவமரியாதை செய்வது என்பது கலாச்சாரமற்றது. குறிப்பாகக் கலைஞர்கள் அனைத்து மொழிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். கமல்ஹாசன் உடனடியாகக் கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
Tags :