தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Staff / 04-01-2024 01:46:58pm
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via