குடிமகன்களுக்கு தீபாவளி பரிசாக 90 மில்லி கட்டிங் சரக்கு..?
தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி மது வகைகளை விற்கதிட்டமிட்டபோது தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெட்ரா பேக்குகளுக்கு பதிலாக பாட்டில்களிலேயே 90 மில்லி கட்டிங் மதுபானங்களை விற்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து இருக்கிறது. தீபாவளி பரிசாக குடிமகன்களுக்கு இந்த விற்பனை தொடங்கும் எனவும், இந்த 90 மில்லி மது பாட்டில்கள் 80 ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : குடிமகன்களுக்கு தீபாவளி பரிசாக 90 மில்லி கட்டிங் சரக்கு..?