முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகை தரவுள்ளார்.அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, காகித ஆலை மற்றும் மக்களை தேடி மருத்துவம் ஆகிய அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகிறார்.நாளை காலை சென்னையிலிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து புறப்பட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறார். அதன் பின்னர், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சன்னாசிபட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு செல்கிறார். அதன் பிறகு மக்களை தேடி மருத்துவம் ஆகிய அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் சென்னைக்கு புறப்படுகிறார்.
Tags :