விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
சுதந்திர தின விழா விடுமுறை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - திருச்சிக்கான கட்டணம் ரூ.2,382-ல் இருந்து ரூ.7,192 ஆக உயர்வு. சென்னை - மதுரைக்கான கட்டணம் ரூ.4,063-ல் இருந்து ரூ.11,716 ஆக உயர்வு. சென்னை - தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.4,301-ல் இருந்து ரூ.10,796 ஆக உயர்வு. கோவை, சேலத்திற்கு செல்லும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
Tags :