கேட்டரிங் பயிற்சி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

by Staff / 14-08-2024 12:06:30pm
கேட்டரிங் பயிற்சி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இளங்கோ ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கொல்லிமலை சேளூர்நாடு மகேந்திரவனம் ஹோட்டலுக்கு இன்று (ஆகஸ்ட் 14) பயிற்சிக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி சுருண்டு விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via