பட்டாசு ஆலை வெடி விபத்து.. இருவர் பலி

by Staff / 14-08-2024 12:01:08pm
பட்டாசு ஆலை வெடி விபத்து.. இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயத்தேவன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கார்த்திகேயன், புள்ளகுட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சல்பேட் எனப்படும் வெடி மருந்தை லாரியில் இருந்து குடோனுக்கு எடுத்துச்செல்லும்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories