ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் தேமுதிக.

சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் தேமுதிகவும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் தேமுதிக.