அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து: கமல் இரங்கல்

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் பலியானோருக்கு மநீம தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கர்நாடக எல்லை அருகே அத்திப்பள்ளி எனும் பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன்.பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :