½அடி உயரத்தில் 100 கைகள் கொண்ட அஷ்ட விநாயகர் பொம்மை விற்பனை கண்காட்சி

by Editor / 04-09-2021 05:23:28pm
½அடி உயரத்தில் 100 கைகள் கொண்ட அஷ்ட விநாயகர் பொம்மை விற்பனை கண்காட்சி

பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை (10ந் தேதி) முன்னிட்டு விநாயகர் பொம்கைள் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இக்கண்காட்சி இம்மாதம் 15ந் தேதி வரை அண்ணாசாலை, பூம்புகார் விற்பனை நிலையத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் இந்த வருடம் பஞ்சலோகத்தில் ஆன 4½ அடி உயரத்தில் நூறு கைகளை கொண்ட அஷ்ட விநாயகர் பிராமண்ட முறையில் சாஸ்திர முறைப்படி தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 31 லட்சத்து 75 ஆயிரத்து 200- ஆகும். இதனைத் தொடர்ந்து பஞ்சலோகம். பித்தளை, களிமண், காகிதக் கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், சுட்டமண் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பலவகை விநாயகர் பொம்மைகள் இடம் பெறுகின்றன.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சியில் சென்னை மாநகர மக்கள் வாங்குவதன் மூலம் தங்கள் இல்லத்திற்கு அழகு கூட்டுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் அதிக அளவிலான கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவும்.கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப்பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 1973-ல் துவக்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்பத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகத்திலும் மற்றும் புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 12 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இ

 

Tags :

Share via