சைவ அர்ச்சகர்களுக்கு பயிற்சி நிலையங்கள்

by Editor / 04-09-2021 05:25:00pm
சைவ அர்ச்சகர்களுக்கு பயிற்சி நிலையங்கள்

இந்து அறநிலையத் துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதியான தேவையான பயிற்சி பெற்ற வரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மதுரை பழனி திருச்செந்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் களுக்கான பயிற்சி நிலையங்கலும், சென்னை ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு அர்ச்சகராக பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்து அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை (2021 2022) சட்டசபையில் இன்று அமைச்சர் தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அவர்களில் 22 அர்ச்சகர்கள் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்தவர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பதாகை இணை வெளியிட்டார் இத்திட்டம் முதல் கட்டமாக நாற்பத்தி ஏழு முதுநிலை திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு பதவியில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் என் பெயர் மற்றும் அவரது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

108 போற்றிகள் அடங்கிய தமிழ் அர்ச்சனை நூல்கள் கிடைக்கச் செய்து இவ்வரசு அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 108 போற்றிகள் அடங்கிய நூல்கள் திருக்கோயில்களில் கிடைக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கியுள்ளார்.

பணியாளர்களுக்கு

பணி நியமன ஆணை

கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் திட்டத்தின் கீழ் இந்த அரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் பணியாற்றும் போது இறந்த 11 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

செம்மொழியாம் தமிழ் மொழிக்கு திருக்கோவில்களில் உரிய இடத்தினை நிலைநாட்டிட மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறோம். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களை யும், அவற்றின் சொத்துக்களையும் பாதுகாக்கவும்,மேம்படுத்தவும் வெளிப்படைத் தன்மையுடன் தீவிர முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது.

ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு திருக்கோவில்களில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.44 கோடி குத்தகை வருமானம்

இந்த அரசு அமைந்த பிறகு 07.05.2021 முதல் 15.08.2021 வரை காலத்தில் கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களிலிருந்து 44.03 கோடி ரூபாய் அளவிலான குத்தகை வருமானம் ஈட்டப்பெற்றுள்ளது.

தனியார் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 60 கோயில்களுக்கு சொந்தமான 301.44 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் 07.05.2021 முதல் 15.08.2021 வரை காலக்கட்டத்தில் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரூ.641 கோடி சொத்துக்கள் மீட்பு

203.00 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும் 170.2105 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும் 1.811 கிரவுண்டு பரப்பிலான கட்டடங்களும் மற்றும் 15.597 கிரவுண்டு அளவிலான கிரவுண்டு அளவிலான கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்டெடுக்கப்பட்டு, அந்தந்தக் கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் சொத்துக்களின் மதிப்பு 641.01 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கோயில்கள் சார்பில் 44 லட்சம் பேருக்கு 12.05.2021 முதல் 21.06.2021 வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,959 கோயில்களுக்கு ஒவ்வொரு கோயில்களுக்கும் ரூ.1 லட்சம் மூலதன நிதி ஒன்று உருவாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து ஒரு கால பூஜை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மூலதன நிதியை இரட்டிப்பாக்கி ரூ.2 லட்சமாக உயர்த்தியும், அதற்காக நடப்பாண்டில் ரூ.130 கோடி அரசு மானியமும் வழங்கப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தனித்துவத்துடன் கூடிய அபிஷேக விபூதி தயாரிக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள், உண்டியல்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக ‘திருக்கோயில் பாதுகாப்புப் படை’ என்ற ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில் 2ம் நிலைக் காவலர்கள் 1000 பேர், முன்னாள் ராணுவத்தினர் 3 ஆயிரம் பேர் நியமனம் செய்வதற்கு அரசு அனுமதி அளித்தது.

கோயில் பாதுகாப்புப் படையில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த மாத தொகுப்பூதியத்தை ரூ.1,500லிருந்து ரூ.5 ஆயிரமாக அரசு உயர்த்தியுள்ளது. இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via