இருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்;ஒருவர் உயிரிழப்பு.

by Editor / 23-01-2025 06:04:06pm
இருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்;ஒருவர் உயிரிழப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் மற்றும்  விஜயகணபதி ஆகியோருக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் பைக் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராரில் பிரேம் என்பவன் தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு யாதவர் சபை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் இப்பகுதியில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : இருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்;ஒருவர் உயிரிழப்பு.

Share via