திருவாரூரில் அனுமதியின்றி 5 இடத்தில் பிளக்ஸ் போர்டு தவெகவினர் மீது வழக்கு பதிவு.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது நான் உங்கள் விஜய் வாரேன் என்கின்ற தலைப்பில் தமிழக முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் நேற்று திருவாரூருக்கு வருகை தந்தார் அப்போது தமிழக வெற்றிக்கழகத்தினர் திருவாரூருக்கு வருகை தரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்காக தெற்கு வீதி நகராட்சி அலுவலகம் முன்பு, கீழ வீதி சந்திப்பு, ரயில்வே மேம்பாலம் கிடாரம் கொண்டான் கானூர் சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளதாக திருவாரூர் நகர காவல் நிலையத்திலும் தாலுக்கா காவல் நிலையத்திலும் அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டு வைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்
Tags : திருவாரூரில் அனுமதியின்றி 5 இடத்தில் பிளக்ஸ் போர்டு தவெகவினர் மீது வழக்கு பதிவு