கொசு மருந்தால் தீ விபத்து - 4 பேர் பலி

by Staff / 19-08-2023 11:46:26am
கொசு மருந்தால் தீ விபத்து - 4 பேர் பலி

திருவள்ளூர், மாதவரம் அருகே கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைபெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது. வீடு முழுவதும் புகை பரவியதில் மூச்சுத்திணறி சந்தானலட்சுமி என்ற மூதாட்டி மற்றும் அவரது மூன்று பேத்திகள் உயிரிழந்துள்ளனர். சந்தான லட்சுமி (60), சந்தியா (10), ரக்‌ஷிதா (8), சந்தான பவித்ரா (7) ஆகியோர் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories