துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சண்டை.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இஸ்ரேலிய துணை தூதரகம் அருகே நேற்று துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. காரில் வந்த மூன்று நபர்கள் துணைத் தூதரகத்தின் வெளியே இருந்த காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் .காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் காயங்களுடன் பிடிபட்டனர். இதில் இரண்டு காவல் துறையினரும் லேசான காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்மிட் நகரில் இருந்து வாடகை காரில் வந்தவர்கள் என்றும் அவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா ஷிப்ட்சி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட நபர் மதரீதியிலான பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன் இதனை ஒரு கொடிய பயங்கரவாத செயல் என வன்மையாக கண்டித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் முதல் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக இந்த தூத கரத்தில் இஸ்ரேலிய தூதர அதிகாரிகள் யாரும் அப்போது பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















