ஆந்த்ரோபிக் நிறுவனம்  மிக ஆற்றல்வாய்ந்த புதிய செயற்கை நுண்ணறிவு கிளாட் மைத்தோஸ் ப்ரிவியூ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

by Admin / 08-04-2026 08:30:12am
ஆந்த்ரோபிக் நிறுவனம்  மிக ஆற்றல்வாய்ந்த புதிய செயற்கை நுண்ணறிவு கிளாட் மைத்தோஸ் ப்ரிவியூ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனம்  மிக ஆற்றல்வாய்ந்த புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியான கிளாட் மைத்தோஸ் ப்ரிவியூ ஐ இணையப் பாதுகாப்பு துறையில் ஒரு மைல்கல்லாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 'பிராஜெக்ட் கிளாஸ்விங்'  மைத்தோஸ் மாதிரியின் பாதுகாப்புத் திறன்களைச் சோதிக்கவும், மென்பொருள்களில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும் ஆந்த்ரோபிக் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.இந்த ஏஐ மாதிரி மிக அதீதத் திறன் கொண்டது .இது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பொதுமக்களுக்குப் பகிரப்படவில்லை. மாறாக, ஆப்பிள் , கூகுள் , மைக்ரோசாப்ட், அமேசான்  போன்ற 40-க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்பநிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது.இது மனித நிபுணர்களை விட வேகமாக மென்பொருள் பிழைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. உதாரணமாக, பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாத 16 ஆண்டுகால பழைய பிழை ஒன்றை இது எபெப்ம்பெக் மென்பொருளில் கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்புப் பணிகளுக்காக 100 மில்லியன் டாலர் வரையிலான பயன்பாட்டுக் கிரெடிட்களை ஆந்த்ரோபிக் வழங்குகிறது. மைத்தோஸ் போன்ற உயர்நிலை ஏஐ மாதிரிகளைப் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளை ஆராய்வதே ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது. 
 

ஆந்த்ரோபிக் நிறுவனம்  மிக ஆற்றல்வாய்ந்த புதிய செயற்கை நுண்ணறிவு கிளாட் மைத்தோஸ் ப்ரிவியூ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via
Logo