நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

by Editor / 09-06-2026 12:15:00pm
நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் சர்வதேச அளவில் தனித்துவிடப்படுவீர்கள் என்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இஸ்ரேல் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ள ஈரான், தங்கள் ஆதரவு நாடான லெபனானை இஸ்ரேல் தாக்கினால் மீண்டும் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளது. இந்த அடுத்தடுத்த எச்சரிக்கைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via
Logo