உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை நிலச்சரிவு.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று (மே 25) பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத், ரிஷிகேஷ் செல்லும் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், பிரபல சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Tags : உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை நிலச்சரிவு.