தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

by Staff / 22-09-2022 01:04:13pm
தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி பாலத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி பெருந்தலைவருமான சேகர் தலைமையில் நடைபெற்றது. ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார். மாநில மருத்துவ பிரிவு இணைச்செயலாளர் கருணாநிதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏழுபட்டி பாலு, மாநில விவசாய பிரிவு இணைச்செயலாளர் நாராயணன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பஞ்சு ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கழக இணைச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

 

Tags :

Share via

More stories