17 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்ற நிகிதா

சிவகங்கை திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்த பேராசிரியை நிகிதா 17 நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார். நேற்று திண்டுக்கல் அரசுக் கல்லூரியில் பாடம் நடத்திய நிகிதா, இன்று முதல் 17 நாட்களில் தொடர்ச்சியாக மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக்கொன்ற நிலையில், காவலர்கள் 5 பேர் கைதாகினர். நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் இருப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :