உலகிலேயே அதிக உறுப்பினர் கொண்ட ஒரே கட்சி பாஜக. 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். - மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன்

கோவில்பட்டியில் பாஜக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
உலகிலேயே அதிக உறுப்பினர் கொண்ட ஒரே கட்சி பாஜக. 10 கோடி உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர்.
மூன்று ஆண்டுகள், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். பாஜகவில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
கடந்த 18 நாட்களில் நேற்றோடு நான்கு கோடி உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.11 கோடி இலக்கோடு உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கோடு நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம் உறுப்பினர் சேர்க்கை வேகமாக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது
நான் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடிய நபர். என்னுடைய குலதெய்வம் பெருமாள் தான். மாதம் ஒருமுறை மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருப்பதி சென்று வருவேன் என்பதால் திருப்பதி லட்டு மாட்டிக் கொழுப்பு கலந்திருப்பது என்பது ஒரு பக்தனாக எனது மனதை புண்படுத்தி இருக்கிறது.
எனது வழிபாட்டு உரிமையில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் செய்துள்ளது இது சாதாரண விஷயம் அல்ல.மிகப்பெரிய தவறு கண்ணுக்கு தெரிந்து கலப்படம் இருந்தது என்பதை மாநிலத்தின் முதலமைச்சர் குற்றம் சொல்லி இருக்கிறார். நாட்டிலே உயர்ந்த தரமுடைய குஜராத் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதுக்கு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசின் உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனைக்கு சென்று இருக்கிறார்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
சகுனிகள் நிறைந்த சமூகத்தில் யோக்கியவானாக இருப்பது கடினம் என்று வேட்டையன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார். ஆகையால் அவர் பேசியது பற்றி பேசினால் நன்றாக இருக்காது என்றார்.
பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்ததை மறந்துவிடக்கூடாது. பாஜக கூட்டணியில் குறைகளை திமுக நிர்வகித்தது என்ற வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும்
கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மரியாதை கொடுத்துள்ளது கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் ஒரே கட்சி பாஜக.
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். 2047-இல் இந்தியா வல்லரசாக வேண்டும், அப்துல் கலாம் அவர்களின் கனவினை நனவாக்க வேண்டும் என்பது போன்ற நோக்கத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்.
பெரியாரை பற்றி பேசாமல் பாஜக அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறது.விஜய் அனைவருக்கும் பொதுவான தலைவராக இருப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர் அவருடைய கடந்த சில நாட்களாக நடவடிக்கை அதற்கு மாறாக உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை பெரியார் இடத்திற்கு சென்று மரியாதை செய்துள்ளார் மரியாதை செய்யட்டும் தவறில்லை ஒரு கட்சி ஆரம்பிக்கும் போது அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி இல்லை என்று கூறினார்
தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது மது ஒழிப்பு என்பது தமிழகத்தில் நிச்சயமாக மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களின் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது.
பாஜக மதுவிலக்கு என்பதை தொடர்ந்து எண்ணமாக கொண்டுள்ளோம். தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஏற்பதற்காக அமெரிக்கா சென்று வந்துள்ளார் ஆனால் தமிழகம் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வரவில்லை அவர்கள் சொன்ன முதலீடுகள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களாகும்
இது பற்றி தமிழக மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் திருமாவளவன் சேர்ந்து மதுவிலக்கு என்ற ஒரு நாடகத்தை ஏற்படுத்தி உள்ளனர் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பத்திற்கு மது ஒழிப்பு என்ற கோஷத்தை எழுப்பி உள்ளனர்
ஒரே கையெழுத்தில் மதுவை திமுகவால் ஒழிக்க முடியும் ஆனால் அவர்கள் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இது யாரை ஏமாற்றுவதற்கு இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் இது மக்களை திசைதிருப்பதற்காகத்தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு செய்யும் என்றார்
Tags : உலகிலேயே அதிக உறுப்பினர் கொண்ட ஒரே கட்சி பாஜக. 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். - மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன்