வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை

by Staff / 25-05-2024 12:04:42pm
வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை

மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த எம்.பி., அன்வருல் அசிம் கொலை வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹனி ட்ராப் மூலம் பெண் ஒருவரால் கொல்கத்தாவுக்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அன்வருல் அசிம் சமீபத்தில் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளர்கள் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி பல்வேறு இடங்களில் சென்று வீசியுள்ளனர்.அசிமின் நண்பரும் வணிக கூட்டாளருமான முகமது அக்தருஸ்ஸாமான் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சிஐடி போலீசார் தெரிவித்தனர். மேற்குவங்கம் மற்றும் டாக்காவில் போலீசார் நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவருடன் பெண் ஒருவரும் இறைச்சிக் கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக இந்தியா வந்த அசிம், மே 13ஆம் தேதி அவரது குடியிருப்பில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via

More stories